தமிழ் வழி சான்றிதழை, தேர்வுத் துறை வழங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு.
தொழிலாசிரியர் தேர்வை, 2017ல் எழுதியவர்களுக்கு, தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ், தேர்வுத் துறையால் வழங்கப்படுவதில்லை.
சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளியின், தலைமை ஆசிரியரை மட்டுமே அணுகி, தமிழ் வழி சான்றிதழை பெற்று கொள்ளலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை அலுவலகத்தை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment