Sunday, August 12, 2018

Plus 1 Supplementary Exam result will Publish Today

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வரும், 13ல் வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 வகுப்புக்கு, ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வு முடிவுகள், வரும், 13ல் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். 
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற, 16 மற்றும் 17ம் தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகலுக்கு, மொழி பாடங்களுக்கு, தலா, 550 ரூபாய்; ஒவ்வொரு பாடத்திற்கும், 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கு, மொழி பாடங்களுக்கு தலா, 305 ரூபாயும், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. Is Baccarat the new craze in the casino? - febcasino.com
    Baccarat is a craze in kadangpintar the 카지노사이트 casino, 바카라사이트 and with that being said, it's a fun game, to play and to try to win.

    ReplyDelete
  2. Casino Roll
    Casino Roll e스포츠 - The biggest casino Roll. Casino is in the business for many players who enjoy 배팅 playing casino yesbet88 games online. You 오즈포탈 can choose from a wide range of  Rating: 호반 그래프 4 · ‎2 votes

    ReplyDelete

VOCATIONAL EDUCATION SECONDARY LEVEL