Saturday, August 11, 2018

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்டு 16 முதல் வழங்கப்படும்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்டு 16 முதல் வழங்கப்படும்
2018-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வரும் ஆக. 16 முதல் துவங்குவதாக தேர்வுகள்இயக்ககம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் சான்றிதழ் பெறுவது தொடர்பான தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி இன்று விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:




 “நடைபெற்று முடிந்த மார்ச் / ஏப்ரல் 2018- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவ மாணவியருக்கும், தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழை, வரும் ஆகஸ்டு 16-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம்.தனித்தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.” இவ்வாறு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

VOCATIONAL EDUCATION SECONDARY LEVEL